குன்னூர் அரசு மருத்துவமனை பகுதியில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகள் பொதுமக்கள் நோயாளிகள் பீதி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை பகுதியில், கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உலாவந்து சுற்றித் திரியும் நிகழ்வுகள் தொடர்வதால் பொதுமக்கள் நோயாளிகள் பீதியில் உள்ளனர்
மருத்துமனை வளாகம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தினசரி அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் காட்டெருமிகள் தன்னிச்சையாக சுற்றித்திரிவதைக் கண்ட பொதுமக்களும், நோயாளிகளும், மருத்துவ பணியாளர்களும் பெரும் பீதியில் உள்ளனர்.
குறிப்பாக நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது
மருத்துவமனை என்பது பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது காட்டெருமிகள் கூட நடமாடும் இடமாகிவிட்டது. வனத்துறையும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குன்னூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்ற மக்கள் மற்றும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாகும். எனவே, காட்டெருமைகள் நடமாட்டம் தடுக்கும் வகையில் நிரந்தர நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக