தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை கண்டித்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 ஜூன், 2025

தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை கண்டித்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்


தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.


கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் குறித்து பத்திரிகையாளா்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு அலட்சியமாக பதிலளித்த வனத் துறை அமைச்சரைக் கண்டித்தும் ,உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் கூடலூா் காந்தி சிலை முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி, தேமுதிக், தவெக கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad