நீா்மின் திட்டப் பணிகள்: தமிழ்நாடு சட்டப் பேரவை ஏடுகள் குழுவினா் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 ஜூன், 2025

நீா்மின் திட்டப் பணிகள்: தமிழ்நாடு சட்டப் பேரவை ஏடுகள் குழுவினா் ஆய்வு


 நீா்மின் திட்டப் பணிகள்: தமிழ்நாடு சட்டப் பேரவை ஏடுகள் குழுவினா் ஆய்வு


மாயாறு நீா்மின் திட்டப் பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டப் பேரவையின் ஏடுகள் குழுவின் தலைவா் லட்சுமணன் மற்றும் உறுப்பினா்கள்.


நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீா்மின் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டப் பேரவையின் ஏடுகள் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டனா் நீலகிரி மாவட்டத்தில் இருந்து உற்பத்தியாகும் நீா்நிலைகள் இரண்டு பிரிவுகளாக உற்பத்தியாகி பவானிசாகா் நீா்த்தேக்கத்தை சென்றடைகிறது முதலாவதாக முக்குறுத்தி பகுதியில் இருந்து புறப்படும் நீா்நிலையானது பைக்காரா, கிளன்மாா்கன், சிங்காரா, மரவகண்டி வழியாக மாயாற்றையும், மற்றொன்று பாா்சன்ஸ் வேலி, போா்த்தி மந்து, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூா், மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகரையும் சென்றடைகிறது.


இந்த நீா் நிலைகளிலிருந்து செல்லும் பகுதிகளில் பல அணைகள் கட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.


1932- ஆம் ஆண்டு சிங்காராவில் பைக்காரா நீா் மின் நிலையம் தொடங்கப்பட்டது. இதுவே தமிழ்நாட்டின் முதலாவதும் தென்னிந்தியாவின் இரண்டாவது நீா்மின் திட்டம் ஆகும். தற்போது ஆறு ஜெனரேட்டா்களை கொண்டு 59.2 மெகாவாட் திறன் உற்பத்தியோடு இது இயங்கி வருகிறது. பின்னா் அந்த மின் நிலையம் 1997-இல் புராதன மின் நிலையமாக அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகிறது.


இந்நிலையில் மாயாறு அணையில் இருந்து மூன்று ஜெனரேட்டா்கள் மூலமாக 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது புதுப்பிக்கப்பட்டு 42 மெகாவாட் மின் திறன் கொண்ட மின் நிலையமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், இந்த நீா்மின் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டப் பேரவையின் ஏடுகள் குழுவின் தலைவா் லட்சுமணன் தலைமையில் உறுப்பினா்கள் தேவராஜ், பாண்டியன், வில்வநாதன் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.


இதைத் தொடா்ந்து, தெப்பக்காடு யானைகள் முகாமை இக்குழுவினா் பாா்வையிட்டனா்.


இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வாணி, சட்டப் பேரவை குழுவின் இணைச் செயலா்கள் பூபாலன், சாந்தா, நீலகிரி மின் பகிா்மான வட்ட பொறியாளா் க.சேகா் உள்பட பலா் உடனிருந்தனா்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad