நகராட்சி கட்டடத்துக்கு ஜாதி பெயர் நீக்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி நன்றி நன்றி!
குடியாத்தம் , ஜூன் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் புதியதாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் இருந்த ஜாதி பெயரை நீக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் கள் தலைமையிலான தமிழ்நாடு அரசுக் கும், நகராட்சி நிர்வாகத்துக்கும் இந்திய குடியரசு கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியின் முதல் தலைவர் மா.ஆ.வேலாயுதம் அவர்கள் பெயரில், நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டிருந்த கட்டடத்தில் மா. ஆ.வேலாயுத முதலியார் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஜாதி பெயர்களை சூட்டக் கூடாது என்ற அரசு விதிமுறைகளை மீறி, அரசு கட்டடத்துக்கு முதலியார் என்று பெயரை வைத்ததைக் கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தம் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது 24.6.2025-அன்று காலை இந்த கட்டடத்தில் இருந்த முதலியார் பெயரை நீக்கி,மா.ஆ.வேலாயு தம் அரங்கம் என்று பெயரை சூட்டியுள்ள னர். இதை கட்டடத்தில் எழுதியிருந்தனர். இந்திய குடியரசு கட்சியின் கோரிக்கை யை ஏற்று, இந்த நடவடிக்கையை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தமிழ்நாடு அரசுக்கும், குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்துக்கும் இந்திய குடியரசு கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். -
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக