வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி :



அ. தி. மு. க ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததால் ஏன்? ஈரோடு சூரம்பட்டி நஞ்சப்பக்கவுண்டன்வலசில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கூடுதல் வகுப்பறையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகள், நோட்டு புத்தகங்கள், பைகளை வழங்கினார்.


இதைத் தொடர்ந்து வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -தமிழகத்தில் விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு நாளன்றே சீருடைகள் புத்தகங்கள் மற்றும் புத்தக பைகள் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டதின் பேரில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. வகுப்பறைகள், லேப் மற்றும் இருக்கைகள், மேஜைகள் என 2.25 கோடி மதிப்பீட்டில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிக்காக கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. நம்ம ஸ்கூல் பள்ளி, ஊர் பள்ளி திட்டத்தின் மூலம் பல தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஈரோடு மாவட்டத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad