சுங்க கட்டணத்தை முறைப்படுத்தாவிட்டால் ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஈரோட்டில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ம.க.ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை அறிவித்திருந்தார்.
குறிப்பாக வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இறப்புத் தொகையை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்ததற்காக தமிழ்நாடு முதல்வரை தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் பாராட்டுகிறேன். மே 5-ம் தேதியை வணிகர் தினமாக அரசு அறிவித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பழ மார்க்கெட் வாகனம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதேபோன்று சுங்க கட்டணம் வசூலிப்பதற்கும் அரசு அனுமதி அளித்திருக்கிறது.
சுங்க கட்டணம் என்று சொன்னால் தற்காலிகக் கடைகளுக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நிரந்தரக் கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பது அரசாணையில் இருக்கிறது என்று அவர் கூறினார்.
தமிழக குரல் இணையதள
செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக