தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது இங்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் கடந்த கோடை விடுமுறை ஒட்டி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருக்கின்றனர்
இங்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் வழியில் அரசு தாவரவியல் பூங்கா என்கிற செட்டியார் பூங்கா அமைந்துள்ளன இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இங்கு அடிப்படை வசதியான கழிவறை மற்றும் நிழற்குடை இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வேதனைக்கு உள்ளாயினர்
இந்த பூங்காவில் கழிவறை மற்றும் மழை பெய்தால் ஒதுங்குவதற்கு நிழற்குடை அமைத்து தர அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக