தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பாக தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக நூலகம் திறப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பாக தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக நூலகம் திறப்பு!

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பாக தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக நூலகம் திறப்பு!
திருப்பத்தூர் , ஜூன் 11 -

தமிழ்நாடு அரசு பொது நூலக துறை சார்பாக தமிழக முதலமைச்சர் காணொ ளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத் தில் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் தமிழக அரசு கலை ஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூறு இடத்தில் 100 நூலகம் திறந்து வைக்க திட்டமிட்டு தமிழ்நாடு அரசுபொது நூலக துறை சார்பாக தமிழகமெங்கும் உள்ள பேருந்து நிலையம் அரசு மருத்து வமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நூலகத்தை திறந்து வைக்க முடிவெடுத்ததை தொடர்ந்து.
முதற்கட்டமாக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து
வைத்தார். இதனைத் தொடர்ந்து திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட தரை தளத்தில் திறந்து வைக்கப் பட்ட நூலகத்தை மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் திமுக மாவட்ட நூலக அலுவலர் உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து அருகாமையில் அரசு மூலமாக வழங்கப் படும் இலவச TNPSC தேர்விற்கு தயாரா கும் மாணவ மாணவிகளுக்கு நூலகத் தை சரியான முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றும் வேறு ஏதேனும் புத்தகங்கள் தேவைப் பட்டால் கூறுங்கள் நூலகத்தில் வைக்க ஏற்பாடு செய்கிறோம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துச் சென்றார்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad