பத்திரிகையாளர்களின் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு அமைதியான தர்ணா போராட்டத்திற்கு வெற்றி!
மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் சுப்பையா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
திருப்பத்தூர், ஜூன்- 11
திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பாளர் சுப்பையா மீது அளிக்கப்பட்ட புகாரை பதிவு செய்யத் தயங்கிய வாணியம்பாடி டிஎஸ்பி விஜய குமாரின் செயலுக்கு கண்டனம் தெரி வித்து, திருப்பத்தூர் பிரஸ் கிளப் சார்பில் பத்திரிகையாளர்கள் உறுதியானஎதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கண்களில் கருப்பு துணி கட்டி அமைதியான போராட் டம்* – பத்திரிகையாளர்கள் தங்கள் கண் களில் கருப்பு துணி கட்டி அமைதியான தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, அதிகார அலட்சியத்துக்கு எதிராக தங்கள் மனவே தனையை வெளிப்படுத்தினர். இதன் மூலம் ஊடக சுதந்திரத்தின் மீது கவனம் செலுத்தும் முயற்சிக்கு பலம் சேர்க்கப் பட்டது.இந்த போராட்டத்திற்கு பின்னர், முன்னாள் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் சுப்பையா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதி செய்கின்றன. திருப்பத்தூர் பஸ் கிளப் பத்திரிகையாளர்களின் ஒற்றுமையும் தைரியமிக்க நடவடிக்கையும், நீதிக்கான வழியை திறந்துள்ளது.இந்தச் சம்பவம் ஊடக சுதந்திரத்தின் அடையாளமாகவும், மாநில அளவில் செய்தியாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக