நெய்வேலியில் முப்புதரில் தூக்கி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

நெய்வேலியில் முப்புதரில் தூக்கி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை

நெய்வேலியில் முப்புதரில் தூக்கி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை, நாய்கள் கடித்துக் குதறிய நிலையில்,  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வட்டம் -30,  திடீர் குப்பம் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில், பிறந்த இரண்டு நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, மர்ம நபர்கள் தூக்கி வீசி உள்ளனர். அவர் தூக்கி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை,  நாய்கள் சுற்றி கடித்துக் குதறி இழுத்துச் சென்றுள்ளது.  இதனைப் பார்த்து அப்பகுதி மக்கள், நாய்களை  அடித்து துரத்தி விட்டு, நெய்வேலி தெர்மல் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர், தலைப்பகுதி முற்றிலுமாக சிதைந்த நிலையில், சடலத்தை மீட்டு, விழுப்புரம் முண்டியம்மாக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முட்புதரில் குழந்தையை தூக்கி வீசிய, தாய் யார் என்பது குறித்தும், குழந்தை எங்கே பிறந்தது என்பது குறித்தும்? விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெய்வேலி முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad