நெய்வேலி ரோமாபுரி புனித அந்தோனியார் ஆலய ஆடம்பர தேர் பவனி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

நெய்வேலி ரோமாபுரி புனித அந்தோனியார் ஆலய ஆடம்பர தேர் பவனி

நெய்வேலி ரோமாபுரி புனித அந்தோனியார் ஆலய ஆடம்பர தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது


கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள ரோமாபுரி புனித அந்தோனியார் ஆலய ஆடம்பர தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது 
கடந்த 15 கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவை தொடர்ந்து இன்று ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது 
கூனங்குறிச்சி பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் அருட்தந்தையர்கள் சகாயராஜ் ,சுவாமிநாதன் நிர்மல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்ட சிறப்பு திருப்பலி நடைபெற்றது
ரோமாபுரி பங்கு மக்கள் மற்றும் வேதியர் தேவராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற தேர் பவனி விழாவில்  ஆலய வளாகத்தில் மாதா, குழந்தை இயேசு மற்றும் அந்தோனியார் சுரூபங்கள் கொண்ட தேர்கள்  மந்திரிக்கப்பட்டு ஆலய வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றது 
தேர்களை பின் தொடர்ந்தவாறு கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி ஜெபங்களை ஜெபித்தவாறு திரளான கிறிஸ்தவர்கள்  தேர் பவணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad