நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்கான மாபெரும் வங்கிக்கடன் உதவிகள் வழங்கும் விழாவில் இன்று கலந்து கொண்டு 278 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.39.83 கோடி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலம் தொழில் தொடங்க வங்கி கடன் உதவிகளை தமிழக அரசு கொறடா கா ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார் உடன் உதகை நகர்மன்ற தலைவர் திருமதி.வாணீஸ்வரி குன்னூர் நகர்மன்ற தலைவர் திருமதி.சுசீலா, கூடலூர் நகர்மன்ற தலைவர் திருமதி.பரிமளா, உதகை நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ரவிக்குமார், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர்கள் திரு.ரமேஷ், திருமதி.ஜெயராணி உட்பட பலர் உள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக