கவுன்சிலர் கூட்டத்திற்கு நிருபர்களுக்கு அனுமதி இல்லை எதற்காக வீடியோ எடுக்குறீங்க போன கட் பண்ணுங்க கமிஷனர் அடாவடி!
திருப்பத்தூர் , ஜூன் 11 -
திருப்பூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட நிறைகள் குறைகள் பற்றி எடுத்துரைப் பது வழக்கம்.மேலும் சில நேரத்தில் சலசலப்புகளும் நடைபெறுவது உண்டு
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு நிருபர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது நகர மன்ற கூட்டத்திற்கு நிருபர்களுக்கு அனுமதி இல்லை தயவு செய்து வீடியோ எடுக்காதீங்க என திருப் பத்தூர் நகராட்சி ஆணையர் சாந்தி அடாவடியில் ஈடுபட்டார் அதன் பின்பு மேனேஜர் ராமலிங்கம் நகர மன்ற கூட்டத்தில் டிஸ்கஸ் பண்றோம் அதனை வீடியோ எடுக்கக்கூடாது எனவும் கூறி மழுப்பல் பதில் கூறினார்.அதன் பின்பு நகராட்சி ஊழியர் ஒருவர் நகர்மன்ற கூட்டம் நடைபெற்ற கட்டிடத்தின் கதவையும் திடீரென மூடினார் அதன் பின்பு தாமதமாக வந்த 30-வது வார்டு கவுன்சிலர் சங்கர் என்பவர் எதற்காக நிருபர்களுக்கு நகர மன்ற கூட்டத்தில் அனுமதி இல்லை என்று கூறுகிறீர்கள் என கேட்டார் அதற்கு சேர்மன் சங்கீதா வெங்கடேஷ் நம்முடைய டிஸ்கஸ் முடிந்த பின்பு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார். இதன் காரணமாக நகர மன்ற கூட்டத்தில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக