ஜாதியை காரணம் காட்டி 13 ஆண்டு களாக தற்காலிகமாக பணிபுரிந்த ஆசிரியரை பள்ளியில் இருந்து வெளி யேற்றம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
வாணியம்பாடி, ஜூன் 11-
திருப்பத்தூர் வாணியம்பாடி நேதாஜி நகரில் இயங்கி வரும் திருவிக அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் 13 ஆண்டு களாக பணிபுரிந்த தற்காலிக ஆசிரியரை ஆதிதிராவிடர் ஜாதியைச் சேர்ந்ததால் பள்ளியில் இருந்து வெளியேற்றம் மன உளைச்சலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத் தில் சரஸ்வதி தற்காலிக ஆசிரியர் ஆதி திராவிடர் என்பதால் பள்ளியில் இருந்து வெளியேற்றம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.மனுவில்
குறிப்பிட்டிருந்தது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் வாணியம்பாடி நேதாஜி நகரில் அமைந்துள்ள திருவிக அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் கடந்த 13 ஆண்டு களாக தற்காலிக ஆசிரியராக பணிபு ரிந்து வந்துள்ளார். மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு மீண்டும் ஆசிரியராக சென்றுள்ளார். அங்கு புதிதாக வந்த ஆண்டாள் என்ற அரசு ஆசிரியை நீங்கள் பணிக்கு வர வேண் டாம் எனவும் நீங்கள் ஆதிதிராவிடர் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவர் என ஜாதியை காரணம் காட்டி வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். மேலும் உன்னைப் போன்ற பிற ஜாதி கீழ் ஜாதி யைச் சேர்ந்தவர் எல்லாம் ஆசிரியராக பாடம் எடுத்தால் நாங்கள் எல்லாம் எங்கு செல்வது என்று உங்கள் ஆட்களுக்கு எல்லாம் துப்புரவு பணி மட்டுமே செய்ய வேண்டும் என மிக அசிங்கமாகவும் கேவலமாகவும் பேசி தற்காலிக ஆசிரிய ரை வெளியே அனுப்பி விட்டார் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிய ஆதிதிரா விடர் பிரிவை சேர்ந்த ஆசிரியை மாவட்ட கல்வி அலுவலர் ஆரம்பப்பள்ளி இடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார்
ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை எனவும் சமூக நீதி சமத்துவம் பேசும் தமிழக அரசு தலையிட்டு மேற்கண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக