கோத்தகிரியில் மண் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

கோத்தகிரியில் மண் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

 


கோத்தகிரியில் மண் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது...


நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி  வாகனங்களுக்கு இயக்க -  பாறைகள் உடைக்க நீதிமன்றம் தடை  உள்ளன...


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களை அழித்து உல்லாச விடுதிகள் கட்ட சாலைகள் அமைக்கும் பணிகளிலும் தற்போது எங்கு பார்த்தாலும் ஜேசிபி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன 


மேலும் ஒரு சிலர் விவசாயிகள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் குப்புட்டா வாகனங்களை பயன்படுத்தி சாலைகள் அமைத்து வருகின்றனர்.


இந்நிலையில்  கோத்தகிரி டானிங்டன் பகுதியில்  காவிலேரை ஆனந்த் என்பவர் குபட்டாவை பயன்படுத்தி   ஓட்டுனர்கள் பாலசுப்பிரமணியன், வேம்புராஜ் ஆகியோர்களை அப்பகுதியில்  மண்ணை திருடியுள்ளதாகவும், வருவாய்த் துறையினர் அவர்களைப் பிடித்து  கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


 அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தடையானை எண் 28406/2011 உள்ளதாலும் மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெறாமலும் பேரிடர் காலத்தில் மேற்கண்ட புலத்தில் மண்ணை தோண்டி பேரிடர் ஏற்படுத்தும் நோக்கில் திருடிச் சென்றுள்ளதால் மேற்கூறிய குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட 1.ஆனந்த் 2 வேம்புராஜ். 3.பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் மீது பாரதீய நீதிச் சட்டம் (ENS) 303(2) மற்றும் 21(1) ன் கீழ் தமிழ்நாடு கனிமவளங்கள் சட்டம் 1957ன் படி வழக்கு பதிவு செய்து கைது செய்து அதனை தொடர்ந்து கோத்தகிரி நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


தொடர்ந்து இது போன்ற நடவடிக்கை ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


குன்னூர்  கூடுதல் ஆட்சியர் சங்கீதா  இது குறித்து கூறும்போது   Jcp,  குப்பட்டா போன்ற வாகனங்கள் அனுமதி இல்லாமல்  பயன்படுத்தினால் பொதுமக்கள் உடனடியாக  வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்க. வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளார் 


தமிழக  குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad