தமிழக குரல் செய்தி எதிரொலியின் காரணமாக காந்திஜி நகரில் உள்ள வடிகால்களை ஜேசிபி எந்திரம் மூலமாக சீரமைப்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட மானாமதுரை தாயமங்கலம் சாலை 10வது வார்டு காந்திஜி நகர் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மழை நீருடன் வடிகால் நீர் கலந்து அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருவின் சாலைகளில் சூழ்ந்து கொண்டதால் துர்நாற்றம் ஏற்பட்டு வார்டு பொதுமக்கள் நோய் தொற்று ஏற்பட்டு கடமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் வசித்து வரும் நிலையில் வீடுகளுக்குள் வடிகால் நீர் புகுந்து கொண்டதால் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயகரமான சூழ்நிலையில், பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பொறுமை இழந்த வார்டு பொதுமக்கள், தங்கள் வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளான வடிகால் மற்றும் சாலை வசதிகளை செய்துதர வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவங்களை தமிழக குரல் செய்தியாக வெளியிடப்பட்டது அடுத்து உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு ஜேசிபி இயந்திரம் மூலமாக காந்திஜி நகரில் உள்ள வடிகால்களை சீரமைக்கும் பணியினது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் இத்துயர சம்பவத்தை உடனடியாக செய்தி வெளியிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வழிவகை செய்த தமிழக குரல் செய்திக்கு 10வது வார்டு பகுதியில் உள்ள காந்திஜி நகர் பொதுமக்கள் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக