சமுத்திர சங்ரம் 2025 பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 ஜூன், 2025

சமுத்திர சங்ரம் 2025 பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம்

சமுத்திர சங்ரம் 2025 பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல் 


ஜனவரி 2026 அன்று தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகசப் பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் 5 தமிழ்நாடு தேசிய மாணவர்  கப்பல் படை பிரிவு மற்றும்  புதுவை 1 தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல்சார் பாய்மரப்படகு சாகச பயணம் 2025 ஜுன் 11 ஆம் தேதி  காலை 10 மணிக்கு புதுவையின் முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி அவர்களால் தொடங்கிவைக்கப்  பெற்றது. இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் சாகசப் பாய்மரம் படகு செலுத்தும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 302 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவுள்ள இந்த பாய்மர படகு சாகசப் பயணம் புதுவையில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்றடைந்து மீண்டும் அதே வழியில் திரும்பும் நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடல் சாகச பயணத்தின் இரண்டாம் நாளான இன்று (12-06-2025)  கடலூர் முதுநகர் துறைமுகத்திலிருந்து இன்று காலை 6 மணியளவில் தொடங்கி  இந்த கடல் சாகசப் பயணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களின் பராக்கிரமத்தை வெளிப்படுவத்த இடர்களை எதிர்கொள்ளும் திறன்களை பெறும் பயிற்சிகள் 2025 ஜுன் 1 ஆம் தேதி தொடங்கி 10ஜுன் 2025 வரை  புதுச்சேரி குருப் பில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளுடன்  கடற்கரையைத் தூய்மை  செய்தல் போன்ற சமூக சேவை நிகழ்வுகளும் தீ தடுப்பு மேலாண்மை முதலுதவி அளித்தல் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.  இந்தப் பயிற்சியில் தேர்ந்த குழுவினருடன்  இந்தப் பயணத்தில் லெப்டினன்ட் கமாண்டர் செந்தூர் லெப்டினன்ட்  அருன்நாட்  ஆகிய இரண்டு கடற்படை அதிகாரிகளும்  சப் லெப்டினன்ட் கோபிநாதன், சப் லெப்டினென்ட் விஜயஆனந்த் 
 சப் லெப்டினன்ட்  தட்சணாமூர்த்தி ஆகிய 3 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் சீப் பெட்டி ஆபிஸர்கள் தலைமையிலான கப்பற்படை பயிற்றுநர்களும் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு உதவியாக அவில்தார்  தலைமையிலான மருத்துவ குழுவினர் பயணம் மேற்கொள்கின்றனர். இப்பயணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில்  மாணவர்கள் பயணிக்கின்றனர். 

இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம் மரம் நடுதல் கடற்கரை தூய்மைப் பணித் திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர். தேசிய மாணவர் படை மாணவர்களின் உள்ளத் திறன் மேம்படுவதோடு கடல் பயணம் குறித்த அச்சம் நீங்கி ஆயுதப் படையில் மாணவர்களை சேரும் எண்ணத்தை தூண்டும் பயிற்சியாக இப்பயிற்சி  அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad