ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று கோவை சரக டிஐஜி சசிமோகன் வந்தார். தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார். அதன்பின், முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததுடன், குற்றப்பின்னணியில் உள்ள குற்றவாளிகளின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷன் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்குமாறு போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், போலீசாரின் குறைகளைக் குறித்து கேட்டறிந்த டிஐஜி சசிமோகன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக