ஊட்டியில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை
ஊட்டியில் செயல்பட்டு வரும் பல உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பு குறித்து வந்த புகார்களின் அடிப்படையில், இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை விவரங்கள்:
மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், முக்கியமான உணவகங்கள், ஸ்னாக்ஸ் கடைகள் மற்றும் சாலையோர உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.
சோதனைக்குழுவில் பணியாற்றிய அதிகாரிகள் ஹைஜீன் நிலை, உணவுப் பொருட்களின் காலாவதி தேதிகள், சேமிப்பு முறைகள் மற்றும் சமையலறை சூழ்நிலை ஆகியவற்றை கவனமாக பரிசோதித்தனர்.
ஊட்டி ஹோட்டல்களில் காலாவதியான கிரில் சிக்கன், பரோட்டா, கேக் உள்ளிட்டவைகளை கண்டு அதிர்ச்சி உதகையில் உள்ள பல உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்
உதகை - உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. காலாவதியான கிரில் சிக்கன், பரோட்டா, சப்பாத்தி, கேக் உள்ளிட்டவை பறிமுதல். ஜூஸ் கடைகளில் நிறம் மாறிய பழங்களை பறிமுதல் செய்தனர்
• பல இடங்களில் சுத்தமற்ற சமையலறைகள் காலாவதி ஆன பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்க பட்டது
பொதுமக்களின் உணவு நலனில் எந்தவிதத் தளர்வும் இருக்க முடியாது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் கூறினார்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
உணவகங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த முறைகளை தவிர்க்கும் நிகழ்வுகள் ஏதேனும் காணப்பட்டால், உடனடியாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கலாம்
புதியதாக பொறுப்பேற்று உள்ள மாவட்ட அதிகாரியின் இந்த அதிரடி சோதனையால் உணவகங்கள் எச்சரிக்கையாக செயல்பட ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் ஊட்டியில் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு மேலும் மேம்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக