ஆதரவின்றி பரிதவித்த மூதாட்டிக்கு அடைக்கலம் தந்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

ஆதரவின்றி பரிதவித்த மூதாட்டிக்கு அடைக்கலம் தந்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை


ஆதரவின்றி பரிதவித்த மூதாட்டிக்கு அடைக்கலம் தந்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை திருப்பூரில் ஆதரவற்ற வயதான ஒருவருக்கு நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அடைக்கலம் கொடுத்தது 

இது பற்றி அறக்கட்டளை நிறுவனர் ந.தேவராஜ் அவர்கள் கூறியதாவது 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா போத்தம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லம் கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து சேவையாற்றி வருகின்றோம் 

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு சுமார் 9 மணி சுமார் போத்தம்பாளையம் பகுதியில் இருந்து பொதுமக்கள் பலர் தகவல் அளித்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் திடீரென கை கால்கள் செயல் இழந்து நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டாராம் பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்த மூதாட்டியை மீட்டெடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். மேலும் சிகிச்சை முடிந்து தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தனது கணவரோ குழந்தைகள் எவரும் இல்லை என்பதால் தனக்கான பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கி உதவுமாறு இந்த மூதாட்டி கண்ணீர் மல்க கேட்டு கொண்டார்..

எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று இந்த மூதாட்டியின் உடல் நிலை அறிந்து எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை இல்லத்திற்கு அழைத்து வந்து  விசாரித்ததில் இந்த மூதாட்டியின் பெயர் ராணி வயது 65  திருமணம் ஆகி குழந்தைகள் யாரும் இல்லை கணவரும் பிரிந்து சென்று வேறொரு திருமணம் செய்து கொண்டார் என்றும் தான் மட்டும் தனியாக வாழ்ந்து வந்திருந்தாராம். திடிரென்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிலேயே தலைச் சுற்றல் ஏற்றப்பட்டு கீழே விழுந்ததில் இடது கை இடது கால் பக்கவாதம் ஏற்ப்பட்டு நடக்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வரும் இந்த மூதாட்டிக்கு நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு உடை வழங்கி பாதுகாத்து மருத்துவர்கள் ஆலோசனை படி வேளாவேளைக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி பாதுகாத்து வருகின்றோம் என்று கூறினார். அறக்கட்டளையுடைய நிறுவனர் ந. தெய்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டு உதவிபுறிந்தனர் .

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad