இராமநாதபுரம் அரியமான் கடற்கரை பகுதிகளில் வெட்டப்படும் சவுக்கு மரங்கள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 ஜூன், 2025

இராமநாதபுரம் அரியமான் கடற்கரை பகுதிகளில் வெட்டப்படும் சவுக்கு மரங்கள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

இராமநாதபுரம் அரியமான் கடற்கரை பகுதிகளில் வெட்டப்படும் சவுக்கு மரங்கள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

 இராமநாதபுரம் மாவட்டம் அர்யமான் கடற்கரை பகுதியில் இயற்கை பேரிடர்களிருந்து மக்களை காப்பதற்காக அரசால் பயிரிடப்பட்ட வளர்ந்து நிழல் தரும் சவுக்கு மரங்கள் உள்ளன இங்கு உள்ள 50 க்கு மேற்பட்ட சவுக்கு மரங்களை அப்பகுதி கட்சி பிரமுகர் ஆட்கள் வைத்து வெட்டி விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இராமநாதபுரம் மாவட்டம் உச்சபுளி சரகத்தைச் சார்ந்த வனத்துறை அதிகாரி அப்துல் ரகுமான் (forest rangger),ஹேமலதா (DFO), நசுருதீன் சந்திரன்Forester) ஆகியோர் கண்டு கொள்ளாமலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வர்கள் தெரிவித்தனர்.

மேலும் சவுக்கு மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்,மற்றும் காவல் கண்காணிப்பாளர், கவனத்தில் கொண்டு சென்று நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என கோரிக்கைt வைக்கின்றனர். இச்சம்பவம் பற்றிய செய்திகள் பொதுமக்கள் இடையே இணையத்தில் பரவிவருகின்றது.

இராமநாதபுரம் மாவட்டம் செய்தியாளர் செந்தில்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad