கடலூர் மாவட்டம் வடலூர் நடேசன் நகர் பகுதியில் சேர்ந்த வின்சென்ட்- சுமதி தம்பதியினரின் மகன் அப்டேல் இவர் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
விடுமுறை நாளான இன்று தனது நண்பர்களுடன் தனது வீட்டு அருகே உள்ள வெங்கலத்தான் ஏரியில் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது ஏரியில் உள்ள பள்ளத்தில் சிக்கிக்கொண்ட வெளியேற முடியாமல் தவித்துள்ளார் இதனைப் பார்த்த சக நண்பர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற குறிஞ்சிப்பாடி தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விடுமுறை தினத்தில் பள்ளி மாணவன் சக நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்க சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக