நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் தோறும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஜூலை, 2025

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் தோறும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம்

 


நீலகிரி கல்வி அறக்கட்டளை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் தோறும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கி  ஊக்குவிக்கும் நிகழ்வில்  இன்று கூடலூர் ஜி.டி.எம். ஓ. பள்ளியில் நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

 

சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் கூடலூர் நகர ஒருங்கிணைப்பாளர் திரு லாரன்ஸ்  அவர்களும்  ப்ளூ ஹில்ஸ் பவுண்டேஷன் தலைவர் திரு அம்சா அவர்களும்  கலந்து கொண்டனர். இவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது நிகழ்வின் நிறைவில் நீலகிரி கல்வி அறக்கட்டளை தலைவர் திரு ஜாபர் நன்றியுரை ஆற்றினார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad