வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு திறப்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஜூலை, 2025

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு திறப்பு விழா!

 வேளாண்மை  விற்பனை  மற்றும் வேளாண் வணிகத்துறை 1000 
மெட்ரிக் டன்  சேமிப்பு கிடங்கு திறப்பு விழா!
 குடியாத்தம் , ஜூலை 4  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் வளாகத்தில் 
1 கோடியே 60 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை சார்பாக ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார் 
இதில் வேளாண்மை விற்பனை வணிக துறை அலுவலர் ஏ கலைச்செல்வி
வேளாண் விற்பனை வணிக செயலாளர் பாஸ்கர்  கண்காணிப்பாளர் சங்கர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி  சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜயன்  கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் 
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந் தலை வர் என் இ சத்யானந்தம் அரசு மருத்து வமனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் ரவி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி தாசன் வேலூர் மாவட்ட வேளாண் மை உற்பத்தியாளர்கள் மாவட்டத் தலைவர் சரக்குப்பம் மு சேகர் மாவட்ட பொருளாளர்  சூறாளூர் பா ஆனந்தன்
மற்றும் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் கோப்பம்பட்டி.மோபழனி வேலன். மற்றும் ரூபேஷ் குருநாதன் சம்பத் நாயுடு வி. ராஜ் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad