மதுரை தோப்பூரில் வருகிற 2026 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று, ராமநாதபுரத்தில் மருத்துவ கல்வி பயிலும் 198 மாணவ, மாணவிகள் உடனடியாக இங்கு மாற்றப்பட்டு அவர்களுக்கென தயார் செய்யப்பட்ட கல்லூரி, மருத்துவமனையில் கல்வி பயில வசதி தயார் நிலை - மேலும் எல்என்டி நிறுவனம் 1700 தொழிலாளர்களை கொண்டு , இரவு, பகலாக எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்தி வருவதால் விரைவில் பணி முடிவடையும் - எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக அதிகாரி அனுமந்த ராவ் பேட்டி. (இன்று நடைபெற்ற எட்டு பேர் கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற பேச்சு)
மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அலுவலகத்தில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக அதிகாரி அனுமந்த ராவ் உள்ளிட்ட சிலரும், காணொளி வாயிலாக நான்கு பேர் கொண்டநபர் உட்பட எட்டு பேர் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக அதிகாரிஅனுமந்த ராவ் நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,
தற்போது தோப்பூரில் 150 படுக்கைகளுடன் கொண்ட மருத்துவமனை , மருத்துவ கல்லூரிக்கான அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளதால், ராமநாதபுரத்தில் பயிலும் 198 மாணவ, மாணவிகள் வருகிற 2026 ஆம் ஆண்டு தை பொங்கல் அன்று உடனடியாக இங்கு அவர்களை இடம்மாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கான கல்வி பயில அனைத்து வசதிகளும் தயாராக உள்ளது எனவும்,
தற்போது எல்என்டி நிறுவனம் 1700 தொழிலாளர்களை கொண்டு இரவு, பகலாக எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்தி வருவதால், ஓரிரு ஆண்டுக்குள் முழு பணியும் நிறைவு பெறும் எனவும் அனுமந்தராவ் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக