பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் "ஓரணியில் தமிழ்நாடு " உறுப்பினர் சேர்க்கை!
பேரணாம்பட்டு, ஜுலை 4 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச் சருமான மு. க. ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்னும் மக்கள் இணையும் திட்டத்தில் திமுகவினர் ஒவ்வொருவரும் வீடு வீடாக சென்று தமிழக அரசின் திட்ட ங்களை எடுத்துரைத்து, மொழி, மண், இனம் காக்க அவர்களை இணைக்க கடந்த 1 தேதி இதனை தொடங்கி வைத்தார். அதன்படி நேற்று திமுகவினர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்டனர். இந்நிலையில் பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் நகர செயலாளர் ஆலியார் ஜூபேர் அஹ்மத் தலைமையில் குடியாத் தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி பார்வையாளர் வெங்கடேசன் மாவட்ட துணை செயலாளர் பிரபாத் குமார் பொதுக்குழு உறுப்பினர் ஆலியார் அர்ஷத் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் தெளபிக் அஹமத் மற்றும் நகர கழக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் அணியின் அமைப்பாள ர்கள் துணை அமைப்பாளர்கள் கிளை கழக செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் விஜயகுமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக