வீடு தேடி நியாய விலை கடை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஜூலை, 2025

வீடு தேடி நியாய விலை கடை


நீலகிரி மாவட்டத்தில் வீடு தேடி நியாய விலை கடை பொருட்கள் வழங்கும் விழா இணைப்பதிவாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.                    


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் இல்லம் தேடி கல்வி.  மக்களைத் தேடி மருத்துவம் மக்களுடன் முதல்வர்.  உங்களைத் தேடி உங்கள் ஊரில் மக்களுடன் ஸ்டாலின் என்ற முன்னோடி திட்டங்களை போல வீடு தேடி ரேஷன் பொருட்கள் என்ற முன்னோடி திட்டத்தினை செயல்படுத்த சோதனை முறையாக தமிழ்நாடு முழுக்க ஜூலை 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டததன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னை நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் ஜூலை 1 முதல் சோதனை ரீதியாக துவங்கப்பட்டது இதில் முதல் கட்டமாக 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடி மக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோ சிரமத்தை நீக்கும் வகையில் அவர்களுக்கு வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் திட்டம் சோதனை அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி வட்டத்தில் உள்ள பெட்டெல்லா பகுதி நேர நியாய விலை கடை அமைந்துள்ள பகுதியில் நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது இதில் கூட்டுறவு சங்கங்களின் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad