குடியாத்தத்தில் இருசக்கர வாகன மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி
குடியாத்தம் , ஜூலை 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் நகர சந்தப்பேட்டை கங்கை அம்மன் கோயில் அருகே உள்ள தரைப் பாலத்தில் இன்று நாள் 4.7.2025 மதியம் சுமார் 12.30 மணி அளவில் காமாட்சி அம்மன் பேட்டை பவளக்கார தெரு பகுதியைச் சேர்ந்த திரு. சம்பத் (வயது65) சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத இரண்டு சக்கர வாகன மோதி யதில் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் இதில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது உடனே இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
இவருக்கு முதல் உதவி சிகிச்சைக்காக பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத் தில் இறந்த மேற்படி சம்பத் என்பவருக்கு திருமணமாகி இரு பெண் பிள்ளைகள் உள்ளனர் மேற்படி இறந்த நபரின் பிரேத மானது வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற் காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இந்த விபத்து குறித்து காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர் தரைப் பாலம் கட்ட துவங்கியது முதல் இன்று வரை இரண்டு நபர்கள் உயிரிழந்து உள்ளார் என்று குறிப்பிடத்தக்கது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக