ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 100 மேற்பட்ட ஆசிரியர்கள் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 100 மேற்பட்ட ஆசிரியர்கள் கைது!

ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 100 மேற்பட்ட ஆசிரியர்கள் கைது!
ராணிப்பேட்டை , ஜுலை 17 -

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்  இயக்கங் களில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 
இந்தப் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களது கோரிக் கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் பேசியஆசிரி யர்கள் ஆசிரியர்களின் பணத்தை தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தி வருவதாகவும் இந்த போக்கை கண்டிப்ப தாகவும் ஆசிரியர்களை கேவலமாக நடத் துவதாகவும் பாதாளத்தில் தள்ளும் போக் கை தமிழக அரசு  கைவிட வேண் டும். இந்தப் போராட்டத்திற்கு தமிழக அரசு முன் வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக் கையாக கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து ள்ளனர்.அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும், உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வினை வழங்கிட வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் என திடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலை அனைவரையும் விடுவித்தனர்.

 மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad