வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் தேரடி தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய திருத்தேர் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் தேரடி தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய திருத்தேர் விழா!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் தேரடி தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய திருத்தேர் விழா!
குடியாத்தம் , ஜூலை 17 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேர் திரு விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கௌரவ தலைவர் பி எஸ் ராஜேந்திரன் கே சம்பத் குமார் எஸ் ஜி விநாயகம்  எஸ்டி மைவண்னன் ஏ கோதண்டன் கே துரை ராஜ் டி சிவகுமார் ஆர் சரவணகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்
இதில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் முன்னாள் நகர மன்ற துணை தலைவர் எஸ்டி மோகன் ராஜ் எஸ்டி மாணிக்கவாசகம் எஸ்டி லோகபிரபு மற்றும் ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ஸ்ரீ காளியம்மன் தேர் அழகு பெருமாள் முதலில் தெரு பெரியதானம் கிராமணி தெருவாசிகள் ராஜகல் குள்ளளப்ப முதலி தெரு அப்பு சுப்பையர் வீதி தலையாரி முனுசாமி தெரு  பலம நோ் சாலை ஆகிய முக்கிய வீதிகளில் தேர் உலா  வந்து  இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மற்றும் அன்னதானங்கள் நடைபெற்றது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad