பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்குடி ரயில் நிலைய வழித்தடத்தை தற்காலிக வழித்தடமாக 12 ரயில்கள் ஜூலை 17 முதல் 27ஆம் தேதி வரை இயக்கப்படும். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்குடி ரயில் நிலைய வழித்தடத்தை தற்காலிக வழித்தடமாக 12 ரயில்கள் ஜூலை 17 முதல் 27ஆம் தேதி வரை இயக்கப்படும்.

 


பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்குடி ரயில் நிலைய வழித்தடத்தை தற்காலிக வழித்தடமாக 12 ரயில்கள் ஜூலை 17 முதல் 27ஆம் தேதி வரை இயக்கப்படும்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ரயில் சந்திப்பு நிலையத்தை தற்காலிக மாற்றுப்பாதையாக பயன்படுத்தி 12 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக திக்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பில், 1) வண்டி எண் : 16847 மயிலாடுதுறை - செங்கோட்டை, 2) வண்டி எண் : 07229 கன்னியாகுமரி - சாரளப்பள்ளி (ஆந்திரா), 3) வண்டி எண் : 12666 கன்னியாகுமரி - ஹவுரா, 4) வண்டி எண் : 16788 மாதா வைஷ்ண தேவி கத்ரா - நெல்லை, 5) வண்டி எண் : 16322 - 16323 (இருமார்க்கம்) கோவை - நாகர்கோவில், 6) வண்டி எண் : 16128 குருவாயூர் - சென்னை, 7) வண்டி எண் : 16352 நாகர்கோவில் - மும்பை, 8) வண்டி எண் : 16354 நாகர்கோவில் - கச்சி குடா, 9) வண்டி எண் : 07192 மதுரை - கச்சிகுடா, 10) வண்டி எண் : 07696 இராமேசுவரம் - சாரளப்பள்ளி, 11) வண்டி எண் : 22631 மதுரை - பிகானி அனுராவத், 12) வண்டி எண் : 22716 மதுரை - கச்சிகுடா உள்ளிட்ட பனிரெண்டு இரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 17 முதல் 27ஆம் தேதி வரை காரைக்குடி வழிதடத்தை தற்காலிக மாற்றுப்பாதையாக பயன்படுத்தி காரைக்குடி ரயில் சந்திப்பை நிறுத்தமாக கொண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. எனவே காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரயில் பயணிகள் மேற்கண்ட ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad