சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளி மற்றும் பாபா கார்டனில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கல்வியின் தந்தையென்றும் போற்றப்படும் பெருந்தகை கர்மவீரர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவின் தொடக்கத்தில் பள்ளி மாணவர்கள் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் மாணவ மாணவிகள் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, கல்விக்காக அவர் செய்த சாதனைகள் பற்றி உரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து பாடல்கள், நடனங்கள், நாடகங்கள், விளக்கவுரைகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.
இவ்வினிய விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் அம்மா.திருமதி பி. ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் காமராஜரின் சாதனைகள் குறித்து பேசினார். தொடர்ந்து பள்ளியின் நிர்வாகி ஆர். மீனாட்சி அவர்கள் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா அவர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி விழாவை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சி பள்ளி மாணவர்களிடையே ஊக்கம் மற்றும் தூண்டுதல் அளித்ததோடு, சமூக பணிக்கான உணர்வையும் உருவாக்கியது கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக