சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம் - கூடுதல் தலைமை செயலாளர்.
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் திரு தீரஜ் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி 10 மாவட்ட எஸ்பிக்களும், 33 ஐபிஎஸ் அதிகாரிகளும் தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு ஆர். சிஷ் பிரசாத் இ.கா.ப அவர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் அப்போதைய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆசிஷ் ராவத் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ் இ.கா.ப அவர்களை சிவகங்கை காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது திரு ஆர். சிஷ் பிரசாத் இ.கா.ப அவர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு பார்த்திபன் அவர்களை மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளராக நியமனம் செய்து தமிழக டிஜிபி திரு சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக