பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்ற 149வது துவக்க நாள் நிகழ்ச்சி
பாரம்பரிய மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் 149வது ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்க நிர்வாகிகள் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
இதில் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கத் தலைவர் முனைவர் கோ. அருள் முருகன், பொருளாளர் ஜமால் நாசர் மற்றும் சங்க நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது, முஹம்மது தாஹா, கணேசமூர்த்தி, வசந்த் மற்றும் சமூக ஆர்வலர் கஃப்பார் அலி கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இரயில் பயணிகளும் பொதுமக்களும் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் பரங்கிப்பேட்டை ரயில் நிலைய முன்னேற்றத்திற்கான கோரிக்கைகளையும் ரயில்வே நிர்வாகத்திற்கு வைத்தனர்
பரங்கிப்பேட்டை இரயில் பயணிகள் சங்கம்
கடலூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக