சிதம்பரம் வறுகை புரிந்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாய் பாய் ஸ்டாலின் முழுக்கமிட்டு இரு முறை பாஜக உடன் கூட்டணி வைத்த திமுகவிற்கு எங்களை பத்தி பேச தகுதி இல்லை கூறினார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

சிதம்பரம் வறுகை புரிந்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாய் பாய் ஸ்டாலின் முழுக்கமிட்டு இரு முறை பாஜக உடன் கூட்டணி வைத்த திமுகவிற்கு எங்களை பத்தி பேச தகுதி இல்லை கூறினார்

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவிற்கு  எங்களை பற்றி பேச தகுதி கிடையாது:எடப்பாடி கே.பழனிசாமி சிதம்பரம், ஜூலை.16: பாரதிய ஜனதா கட்சியுடன் இருமுறை கூட்டணி வைத்திருந்த திமுகவிற்கு எங்களை பற்றி பேச தகுதி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.


அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி  கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தில்  சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு சிதம்பரம் நகருக்கு செவ்வாய்க்கிழமை இரவு வருகை தந்தார். பின்னர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாலை சிதம்பரம் மேலரவீதீயில் நடைபெற்ற ரோடுஷோ நிகழ்ச்சியில் வேனில் இருந்தபடியே மக்களிடை உரையாற்றினார்.


அப்போது அவர் பேசியது: சிதம்பரத்தில் எனது ஜூலை 15  சுற்றுப்பயணம் தெரிந்தே  மு..க.ஸ்டாலின்  முதல்வர் என்ற அதிகாரத்தில் சிதம்பரம் வந்து சென்றிருக்கிறார். எனது சுற்றுப்பயணத்திற்கு இடையூறாக வந்து சென்றுள்ளார். பாஜகவுன் கூட்டணி வைத்தால் அதிமுகவை விழுங்கிவிடும் என ஸ்டாலின் கூறுகிறார். நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்த போது விழுங்கி விட்டார்களா? வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றீர்கள். ஆட்சி, அதிகாரம் வேண்டுமென்றால் யார் காலில் வேண்டுமானாலும் விழுவார்கள். இருமுறை பாஜகவுன் கூட்டணி வைத்திருந்த திமுகவிற்கு  எங்களை பற்றி பேச தகுதி கிடையாது. கூட்டணி இருக்கும் போது ஒரு நாடகம். இல்லாத போது ஒரு நாடகமாடுகிறார் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். பாஜகவை கண்டு பயம் என ஸ்டாலின் பேசுகிறார். பயம் என்ற சொல்லே அதிமுக அகராதியில் கிடையாது. ஒருமுறை சட்டப்பேரவையில் எம்ஜிஆர், திமுகவை எதிர்த்து பேசிய போது திமுகவினர் புத்தகத்தை வீசி தாக்கினர். அப்போது எம்ஜிஆர் இதே சட்டப்பேரவையில் முதல்வராக நுழைவேன் என சபதமிட்டு முதல்வராக நுழைந்தார். 1987ல் நான் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி சட்டப்பேரவையில் சென்ற போது அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை பெண் என்று பாராமல் திமுகவினர் கடுமையாக தாக்கினர். அப்போது மீண்டும் தமிழக முதல்வராக சட்டப்பேரவைக்குள் நுழைவேன் என சபதமிற்று 1991-ல் ஜெயலலிதா முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார். மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே ஜெயலலிதா கார் மீது லாரியை மோதி விபத்தை ஏற்படுத்தினார்கள். அதிமுக கட்சியை உடைக்க பார்த்தார்கள். அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு தெய்வங்கள் உருவாக்கிய கட்சி.


பாஜக கட்சி தீன்டதகாத கட்சி என கூறிய ஸ்டாலின் இன்று பிரதமருக்கு வெள்ளை கொடி பிடிக்கிறார் தற்போது திமுக குட்டித்தலைவர் என்னை பார்த்து எடப்பாடி அமித்ஷாவை சந்திக்கிறார் என பேசுகிறார். அவர் பாக்கிஸ்தானைச் சேர்ந்தவர் அல்ல. இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர். வரை சந்திப்பது என்ன தவறு உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி பிரதமரை சென்று சந்திக்கின்றனர். அவர்களுக்கு பிரதமர் மீது பயம். இங்கு வீராப்பு. சட்டப்பேரவையில் ஸ்டாலின் என்னை பார்த்து 2031 வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறினீர்கள். தற்போது கூட்டணி வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்கிறார். அவருக்கு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஆட்சி பறிபோய்விடும் என்ற பயம். 2026ல் அதிமுக தலைமையில் பிரமாண்டமான கூட்டணி அமையும். தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையும். மத்தியில் வி.பி.சிங் மத்திரிசபை, தேவகவுடா மந்திரிசபை, ஐ.கே.குஜ்ரால் மந்திரிசபை, காங்கிரஸ் கட்சி மந்திரிசபை என மத்தியில் கருணாநிதி குடும்பத்தினர் 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்திற்கு நிதி மற்றும் திட்டங்களை பெற்றுத்தரவில்லை.


முதல்வர் ஸ்டாலினுக்கு நடைபெறவுள்ள தேர்தல் மத்திய ஆட்சிக்கான தேர்தலா மாநில ஆட்சிக்கான தேர்தலா என வித்தாயாசம் தெரியாமல் பாஜகவை பற்றி பேசி வருகிறார். மக்களை குழப்பி ஆட்சிக்கு வர பகல் கனவு காணுகிறார். 2011-2021 வரை நிறைவான ஆட்சியை அதிமுக கொடுத்தது. 2021-25ல் நடைபெறும்  திமுக ஆட்சி எப்போது அகற்றப்படும் என மக்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம். மிக மோசமான நிலை உள்ளது. திமுக ஆட்சியில் மொத்தம் 7737 கொலைகள் நடைபெற்றுள்ளது. 6 மாதங்களில் 730 கொலை நடைபெற்றுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை அமோகமாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. போலீஸார் தாக்கப்படுகின்றனர் எனும் போது இவர்கள் எப்படி மக்களை காப்பாற்ற முடியும். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தலைவர் அற்புதமான ஆட்சி என பேசியுள்ளார். வரும் தேர்தலில் குறைந்த இடங்கள் தருவார்கள் என தெரியாமல் பேசுகின்றார். அவர்களால் 4 ஆண்டுகால அக்கிரம ஆட்சியை தட்டி கேட்க முடியவில்லை. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி விழுப்புரம் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விசிக கொடிகம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டும் அற்புதமான ஆட்சி என கூறுகின்றனர். அதிமுக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அதிமுக 30 ஆண்டு கால ஆட்சியில் இஸ்லாமியர்கள் கண்ணின் இமை போன்று பாதுகாக்கப்பட்டனர். 2001ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா இஸ்லாமியர்கள் கோரிக்கையை ஏற்று புனித ரமலான் நோன்பு கஞ்சி வைக்க 5440 மெட்ரிக் டன் அரிசியை வழங்கினார். நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டு விலையில்லா சந்தன கட்டைகளை வழங்கினார். இஸ்லாமியர் ஹஜ் பயனத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில்தான், சென்னையில் ஹஜ் இல்லம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad