15 நாட்களாக மின்சாரம் இல்லாமல்
டிரான்ஸ்பார்மர் வெடித்த எரிந்த நிலை யில் விவசாயிகள் வேதனை கண்டு கொள் ளாத மின்சார வாரியம் !
குடியாத்தம் , ஜூலை 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் போஜனா புரம் ஊராட்சி மேல் சுந்தரகுட்டை பகுதி யில் உள்ள மின் மாற்றி கடந்த 15 தினங் களுக்கு முன் எரிந்துள்ளது இது சம்பந்தமாக அத்துறையினர் மின்மாற்றி கழற்றி எடுத்துச் சென்றுள்ளார்கள் இதுநாள் வரை சரி செய்யவில்லை
இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 40 ஏக்கர் நிலங்கள் தண்ணீர் இல்லாமல் வாடிய நிலையில் உள்ளது மேலும் கால்நடைகளுக்கு தீவனங்களும் இல்லை இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்தில் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் இல்லை எனவே உடனடியாக மின்மாற்றி சரி செய்து அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக