இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள நல்லிகை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் சமூக வேற்றுமையின் காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த மக்கள், கோயில்களில் சாமி தரிசனம் செய்யக்கூடாதென தடை விதிக்கப்படுவதாகவும், அவர்களை ஊரிலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள் என்றும் புகார் எழுந்துள்ளது. ஒரு சிலர் இணைந்து ஏற்கனவே தீர்மானித்து செயல்படுவதாலேயே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நியாயமற்ற நிலைமையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்துள்ளனர்.மனுவில், அவர்கள் சமூக உரிமைகளை மீண்டும் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி, நீதியுடனான தீர்வை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக