காட்பாடி வடக்கு பகுதி திமுக இளைஞ ரணி அமைப்பாளர் எம்.காளிதாசன் தலைமையில் தெருமுனை கூட்டம்!
காட்பாடி , ஜுலை 21 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட் பாடி வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டா லினின் 4 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை கூட்டம், காட்பாடி வடக்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் எம்.காளி தாசன் தலைமையிலும், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜி.வன்னியராஜா புஷ் பலதா முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காட்பாடி பகுதி அமைப்பா ளர்கள் எஸ்.ராஜேஷ், ஜெகதீசன், ஜே.புவ னேஸ்வரன் ஜி,ராஜேஷ், எஸ்.ஜெய்சங்கர் அஸ்வின் பால்ராஜ், விஜய் பிராங்கிளின், வட்ட செயலாளர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் ஜி.ரவிக்குமார் டீட்டா சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொ ண்டு இக்கூட்டத்தை சிறப்பி த்தனர். இறுதியில் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.ஜெயசங்கர் நன்றி யுரையாற்றி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நிறைவுபெற்றது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக