தூத்துக்குடி மாநகராட்சி, அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இன்று (17.07.2025), பொதுமக்களிடமிருந்து துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு, அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அனைத்து அரசுத் துறை சார்ந்த அலுவலர்களும் ஓரிடத்தில் ஒன்றிணைந்து அரசு துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கக்கூடிய "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்ககூடிய இச்சிறப்பு முகாம் 15.07.2025 முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்றையதினம் (16.07.2025) தூத்துக்குடி மாநகராட்சியில் 24,25,26 ஆம் வார்டுகளுக்கு பீச் ரோட்டில் உள்ள தூய மரியன்னை பெண்கள் கலைக் கல்லூரியிலும், திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் ஸ்டார் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏரல் பேரூராட்சி பகுதியில் உள்ள மகாராஜா திருமண மண்டபம், ஏரல் வட்டத்தில் உள்ள வாழவல்லான் அரசு மேல்நிலைப்பள்ளி
மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், கடலையூர் கிராமத்தில் உள்ள நாடார் திருமண மண்டபத்திலும் இச்சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் ஊரக பகுதியிலிருந்து 811 மனுக்களும், நகர்ப்புற பகுதியிலிருந்து 504 மனுக்களும் என மொத்தம் 1315 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி 1890 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும், பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 45 நாட்கள் அல்லது 30 நாட்களுக்குள் தீர்வு காணக்கூடிய மனுக்களாக 793 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 522 மனுக்கள் 45 நாட்களுக்கு அதிகமாக தீர்வு காணக்கூடிய மனுக்களாக பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படுகின்ற அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு வாய்ந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்தார்கள்.
மேலும், நாளை (18.07.2025) “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ள இடங்களின் விவரம் :-
துத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வார்டு எண் 38,41 மற்றும் 29 ஆகிய பகுதிகளுக்கு அபிநயா திருமண மண்டபத்திலும், கோவில்பட்டி நகராட்சி வார்டு எண். 22,25 ஆகிய பகுதிகளுக்கு சத்யபாமா திருமண மண்டபத்திலும், கயத்தாறு பேரூராட்சி பகுதியல் இந்திரா நகர் சமுதாய நலக்கூடத்திலும், கானம் பேரூராட்சி பகுதியில் கானம் சமுதாய நலக்கூடத்திலும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், படுக்கப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், புன்னக்காயலில் உள்ள வளனார் திருமண மண்டபத்தில் வைத்து முகாம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் (மேற்கு மண்டலம்)
வெங்கடாச்சலம், வட்டாட்சியர்கள் முரளிதரன் (தூத்துக்குடி), முருகேஷ்வரி (ச.பா.தி) மற்றும் அனைத்து அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக