தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களி ன் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) இரண்டாவது நாளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 200 பேர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஜூலை, 2025

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களி ன் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) இரண்டாவது நாளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 200 பேர் கைது!

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங் களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) இரண்டாவது நாளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 200 பேர் கைது!

வேலூர் , ஜுலை 18 -

வேலூர் மாவட்டம் தொடக்கக் கல்வி ஆசி ரியர் இயக்கங் களின் கூட்டு நடவடிக் கைக் குழு (டிட்டோஜாக்) இரண்டாவது நாளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 200 பேர் கைது! பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான ஊதியம், அரசா ணை 243 இரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரில் தொடர் மறியல் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் எதிரே நடைபெற்றது.  மறியலில் பங்கேற்ற 200 ஆசிரிய ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவித்தனர்.

இரண்டாவது நாள் மறியல் போராட்டத் திற்கு மாநில துணைத்தலைவர் எஸ். ரஞ்சன் தயாளதாஸ் தலைமையில் மாவ ட்ட நிர்வாகிகள் கு.கீதா, எஸ்.சபீதா, ஆ.ஜோசப்அன்னையா, மு.குப்புராமன், எ.டி.அல்போன்ஸ்கிரி, எ.ஏழுமலை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர் கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வாழ்த்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டப் பின் அகில இந்திய செயற்குழு உறுப்பி னர் செ.நா.ஜனார்த்தனன் பேசினர்.

மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தேர்தல் கால வாக்குறுதியில் கூறியபடி தன்பங் கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக நடைபடுத்திய கோரியும், ஊதிய முரண்பாடுகளை களைந்திட கோரியும், அரசாணை எண்.243ஐ இரத்து செய்திட கோரியும், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கிட கோரியும், காலியக உள்ள ஆசிரியர் பணியிடங் களை நிரப்பிட கோரியும் கோஷங்கள் எழுப்பினர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் பின்னர் மாலையில் விடுதலை செய்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad