அரசு பள்ளிகளில் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றல் மேம்படுத்து வதற்கான பயிற்சி கருத்தரங்கம்!
வேலூர் , ஜுலை 18 -
அரசு பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோ தனை செய்து கற்றலை மேம்படுத்துவதற் கான வானவில் மன்ற கருத்தளாகளுக் கான பயிற்சி கருத்தரங்கம்!
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடு நிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம்வகுப்பில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள்
பயன்பெறும் வகையில் வானவில்
மன்றம் எனும் திட்டம்பள்ளிக்கல்வித் துறை யோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 2022-23ஆம் கல்வியாண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நான்காவது ஆண்டாக 2024-25ஆம் கல்வியாண்டில் இத் திட்டத்தின் கருத்தாளர்களுக்கான பயிற்சி கருத்தர ங்கம் இன்று 18.07.2025ல் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சு.தயாளன் அவர்கள் வழி காட்டுதலின்படி நடைபெற்றது .
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் கே.எம்.ஜோதிஸ்வர பிள்ளை திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினார்.வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்று பேசினார் தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் முன்னி லை வகித்து பேசினார். காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலை மை ஆசிரியை கோ.சரளா உதவி தலை மையாசிரியர் எம்.மாரிமுத்து, அறிவியல் இயக்க வேலூர் கிளைத்தலைவர் முத்து சிலுப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினார் கள். வானவில் மன்ற மாவட்ட இணை அமைப்பாளர் கே. விஸ்வநாதன் மாவட்ட பயிற்சி கருத்தாளர் என்.கோடீஸ்வரி ஆகியோர் பரிசோதனைகளையும் ஜூலை மாத செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் மூலம் செய்து காட்டி விளக்கி பயிற்சி அளித்தனர்.
அறிவியல் கணித பயிற்சிகளை செய்திட வசதியாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 15 கருத்தாளர்களுக்கு கையடக்ககணினி (Tab-system) வழங்கப்பட்டது பள்ளிக் கல்வித்துறையின் வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படு த்துவதற்கான வானவில் மன்றம், மற்றும் நடமாடும் அறிவியல் ஆய்வகம் ஆகிய திட்டங்களை 2022-23 ஆம் கல்வியாண் டில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் வானவில் மன்றம் எனும் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப் பட்டு வருகிறது நான்காவது ஆண்டாக இது திட்டம் நடைபெறுகிறது.இந்த திட்டம் பள்ளிக்கல்வி துறையோடு இணைந்து மாநில அளவில் ஒருங்கிணைக்கும் பணி யை 710 வானவில் மன்ற கருத்தாளர்கள் மற்றும் ஐந்து மண்டல ஒருங்கிணைப் பாளர்கள் மூலமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக