நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மக்களுடன் ஸ்டாலின் உதவி மையம்!
நெமிலி, ஜுலை 18-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில், கணபதிபுரம் ஊராட்சியில் *உங்களுடன் ஸ்டாலின் முகாம்* நடைபெற்றது. இதில் அரசின் அனைத்து துறைகளின் சார்பிலும் அதி காரிகள் கலந்து கொண்டு, பொதுமக்களி டமிருந்து கோரிக்கை மனுக்களை பெற் றனர். இதில் கணபதிபுரம், சித்தூர், முருங்கை, பின்னாவரம், மாங்காட்டுச் சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்த முகாமின் போது, திராவிட முன்னே ற்ற தலைமை கழகத்தின் அறிவுறுத் தலின்படி, நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் உங்களுடன் ஸ்டாலின் - உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
அதில் தன்னார்வல தொண்டர்கள் ஈடு பட்டு, முகாமில் மனுக்களை கொடுக்க வந்த பொதுமக்களுக்கு உதவிகரமாக, கோரிக்கைள் அடங்கிய மனுக்களை எழுதிக் கொடுத்து உதவி செய்தனர்.
மேலும் முகாமிற்கு வருகின்ற பொதுமக்க ளுக்கு குடிநீர், குளிர்பானங்கள், தேநீர் போன்றவற்றை வழங்கி, அவர்களை இன்முகத்தோடு வரவேற்றனர். இந்த முகாமில், நெமிலி ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள், கணபதிபுரம் ஒன்றிய குழு உறுப்பினர், சரஸ்வதி பார்த்திபன், துணைத் தலைவர் சேகர், மற்றும் நிர்வாகிகள் நரசிம்மன் ஆனந்தன், சம்பந்தன், கிருஷ்ணன், சுதர்சன், ரோஷன், பரத்ராஜ், லட்சுமிபதி, லோகநாதன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக