காரைக்குடி அழகப்பா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - ல் படித்த பழைய மாணவர்கள் 2003 - 2005 பேட்ஜ் (10ஆம் ஆண்டு ) அலுமினி மாணவர்களின் சந்திப்புக்கு பிறகு 20-ம்ஆண்டு நட்பு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் நிகழ்ச்சியில் பேராசிரியர்களும் மாணவர்களும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.,இது குறித்து டாக்டர்.டி.ரவீந்திரன் கூருகையில் :
காரைக்குடி அழகப்பா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஜென்ரல் 2003 - 2005 பேட்ஜில் 61 பேர் பயின்றோம் (10ஆம் ஆண்டு ) சந்திப்பிக்கு பின் தற்போது 20ம் ஆண்டு ரீயூனியன் நிகழ்ச்சியில் யு எஸ் ஏ , பெல்ஜியம் , துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 30 பேர் வருகை தந்துள்ளனர்.
சாதாரண உரையாடல் நிகழ்வாக மட்டுமன்றி நாங்கள் படித்த இன்ஸ்டிட்யூட்ஸிற்கு டைரக்டர் அறை முன் வாசலில் அமர்வதற்காக ரூ.25 ஆயிரம் மதிப்பில் இருக்கைகள் மற்றும் அலுமினி பூங்காவில் வருகை தரும் பொது மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரேசன் தலைமையிலான குழுவினர்கள் மருத்துவ முகாம் நடத்தினர். மேலும் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவிகளான அனு பாரதி மற்றும் ஜெயஸ்ரீ. ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம் , இரண்டாம் பரிசாக ரூ.1500 வழங்கப்பட்டது மற்றும் முவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களான சரண்ராஜ் முகேஷ் குமார் மற்றும் அப்துல் மாலிக் ஆகியோருக்கு ரூ.2 ஆயிரம், ரூ.1500, ரூ.1000 உதவித்தொகைகள் வழங்கப்பட்டது., சமூக உதவிகளை செய்யும் வகையில் பர்மாகாலணியில் உள்ள ட்ராப்ஸ் முதியோர் இல்லத்தில் காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது.,அவர்களுக்கு தேவையான 10000 மதிப்புள்ள உபகரணங்களும் வழங்கியுள்ளோம்.,நாங்கள் படித்த கல்லூரிக்கும், சமுதாய முன்னேற்றதிற்காக எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக நாங்கள் படித்த கல்லூரிக்கு வருகை தருவோம் என்பதே எங்களுக்கான மகிழ்ச்சியான தருணமாகும். இலவச மருத்துவ முகாமில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. ரவி கலந்து கொண்டு எங்களுடன் உரையாற்றியதற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார். வருகை தந்த மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படிக்கும் காலங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக