வேலூர் அடுத்த இலவம்பாடியில் விவசாய நிலத்தில் புள்ளிமான் மேயும் போது திடீரென கிணற்றில் தவறு விழுந்து உயிருடன் மீட்பு!
அணைக்கட்டு, ஜுலை 13 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இளவாடியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு துள்ளி குதி த்து விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை வேலூர் தீயணைப்பு படை வெகு நேரம் போராடி ஒரு கீரலின்றி லாவ கமாக மீட்ட தீயணைப்பு படை மற்றும் வனத்துறையினர், மீட்ட புள்ளிமானை குடிசை கிராம வனப்பகுதி காப்புகாட்டு க்குள் விட்ட வனத்துறையினர் கிராம பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, இலவம்பாடி ஊராட்சி, குடிசை சாலை தெரு, கொல்லைமேடு விவசாய நிலங்களில், முயல், பன்றி, மான், மயில் போன்றவை சுற்றித்திரிந்து மேய்வது வழக்கம். குடிசை கிராமம் வனப்பகுதி காட்டிலிருந்து, புள்ளிமான் ஒன்று காட்டின் கால்வாய் வழியாக விவசாய நிலத்திற்கு வந்துள்ளது. இந்தப் புள்ளிமான் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டுள்ள போது திடீரென துள்ளி குதித்து விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. உடனடியாக இப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறை படையினர், தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) முருகேசன், மூத்த தீயணைப்பு வீரர் பாண்டியன் தலைமையில், தீயணைப்பு பணியாளர்கள் சதீஷ்குமார், விமல்குமார், தினேஷ், சுந்தர் அஜித்குமார் கிணற்றில் இறங்கி தீவிரமாக இரண்டுமணி நேரப்போராட்டத்திற்கு பிறகு ஒரு கீறலன்றி புள்ளிமானை மீட்டனர். வேலூர் வனச்சரக அலுவலர் தரணி, அணைக்கட்டு வனத்துறை வனவர் துரைமுருகன் தலைமையில், வனத்துறை பணியாளர்கள் சோழவரம் பிரிவு பன்னீர்செல்வம், அத்தியூர் பிரிவு காந்தகுமார், வனக் காப்பாளர்கள் செல்வராஜ், தயாளன், வனக் காவலர்கள் சந்தோஷ்குமார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தீவிர முயற்சியில் மீட்ட புள்ளிமானை பாதுகாப்பாக கொண்டு சென்று இலவம்பாடி ஊராட்சி, குடிசை கிராம வனப்பகுதி காப்பு காட்டுக்குள் விட்டனர். இது குறித்து இப்பகுதியில் வசிக்கும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தீயணைப்புப்படையினர் மற்றும் வனத்துறையினரின் நற்பணியை பாராட்டி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக