குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் 2025-2026புதிய தலைவர்கள் பதிவேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஜூலை, 2025

குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் 2025-2026புதிய தலைவர்கள் பதிவேற்பு!

குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் 2025-2026புதிய தலைவர்கள் பதிவேற்பு!
குடியாத்தம் , ஜூலை 10 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2025 -2026 இந்த ஆண்டு தலைவர் மற்றும் நிர்வாகி கள் பதவி ஏற்பு விழா  10. 7.25 வியாழக் கிழமை காலை 10 மணி அளவில்  குடியாத்தம் ரோட்டரி சங்க வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 25- 26 ஆம் ஆண்டிற்கான தலைவராக ரோட்டே ரியன் மாணிக்கம் அவர்கள் பதவி ஏற்று கொண்டார் செயலாளராக வைத்தீஸ்வரி அவர்களும் பொருளாளராக பாக்கம்
இளங்கோ சங்கப் பணி இயக்குனராக
RTN A.G. திலிப் குமார் மற்றும் நிர்வாகி களும் பதவியேற்றுக்கொண்டனர் இந்நிகழ்ச்சியில் சென்ற ஆண்டு சங்கத் தலைவர் அருள் பாலாஜி சங்கத்தின் சாசன தலைவர் எம் கோபிநாத், கே கோபிநாத், ராஜேந்திரன், குமரவேல் ,இளங்கோ, உள்ளிட்டோரும் வருங்கால தலைவர்கள் பிரதீப், அருள், ஸ்டாலின்  சிறப்பு விருந்தினர்களாக. மாவட்ட ஆளு நர் சுரேஷ்  முன்னாள் மாவட்ட ஆளுநர்  ஜே கே என் பழனி, மாவட்ட மாநாட்டு தலைவர் சுந்தர்ராஜன், மாவட்டத் துணை ஆளுநர்  மேகராஜ்  கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சியில் தையல் இயந்திரம், தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்ட ணம் வழங்கப்பட்டது, அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது  மேலும் இந்நிகழ்ச்சியில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad