பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜூலை22, 23ந் தேதிகளில் கோவை, திருப்பூர் வரும் முதல்வர் மு க ஸ்டாலின்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் சென்னையில் இருந்து விமான மூலம் 22 ஆம் தேதி கோவை விமான நிலையம் வருகிறார். பின்னர் காரில் செல்லும் முதல்வர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 23ஆம் தேதி பொள்ளாச்சி அருகே நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் பங்கு பெற்ற தலைவர்கள் காமராஜர் சுப்ரமணியன் மற்றும் மகாலிங்கம் சிலைகளை திறந்து வைப்பார். பின்னர் உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திட்டப்பணிகள் தொடக்க விழாக்கள், ரோடு ஷோக்களும் நடைபெற உள்ளன .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக