செர்டு நிறுவனத்தின் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுவின் 23 ஆம் ஆண்டு தொடக்க விழா மானாமதுரை குலாலர் தெருவில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குலாலர் தெருவில் இயங்கி வரும் செர்டு நிறுவனத்தின் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுவின் 23 ஆம் ஆண்டு தொடக்க விழா மானாமதுரை குலாலர் தெருவில் உள்ள மண்பாண்ட தொழிலாளர் கூட்ட அரங்கில் தலைவர் க. தேவதாஸ் அவர்களின் தலைமையிலும், செயலாளர் செ. நாகலிங்கம் அவர்களின் முன்னிலையிலும், உதவி செயலாளர் ஆ. அடைக்கலம் அவர்களின் வரவேற்புரையோடு நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி சாதனங்கள் வழங்குதல் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சீல்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வுகளில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏறத்தாழ எல்கேஜி முதல் 12ம் வகுப்புவரை கல்வி பயின்று வரும் சுமார் 200 மாணவர் மாணவிகள் பரிசுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் ஓய்வு உதவி தலைமை ஆசிரியர் பி. வி. மோகன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பி. மீனாட்சி, செர்டு தொண்டு நிறுவன இயக்குனர் லயன் டாக்டர் எல். பாண்டி, பன்னிரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எஸ் நதியா செல்வம் ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். இறுதியாக உதவி தலைவர் ஞா. சங்கர் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், செர்டு தொண்டு நிறுவன நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக