காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.


கானாடுகாத்தான் லோட்டஸ் பேலஸில் ஜூலை 25 இரவு தங்கி மறுநாள் காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.


தமிழகம் முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, ஜூலை 25ஆம் தேதி திருமயத்தில் பிரச்சாரம் முடித்ததும், சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் லோட்டஸ் பேலஸில் அன்றைக்கு இரவு தங்குகிறார். 


மறுநாள் 26 ஆம் தேதி காலை மற்றும் மதியம் உணவை முடித்துக் கொண்டு அன்றைக்கு மாலையில் காரைக்குடியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்கிறார்.


இந்நிலையில் கானாடுகாத்தான் பேரூர் கழகச் செயலாளர் சுப்ரமணியன் கூறுகையில், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி. ஆர். செந்தில்நாதன் ஆலோசனையின் பேரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர் ஆகிய பேரூர் கழக தொண்டர்கள் சுமார்  5 ஆயிரம் பேர் திரண்டு வரவேற்க உள்ளனர் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad