மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டே பெட்டிஷனில் புகார் கொடுப்பது வேஸ்ட் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சி!
வேலூர் , ஜுலை 21 -
தீக்குளிக்க முயன்ற புலிமேடு கிராமத் தை சார்ந்த விவசாய முதியவர் காசி!
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட் கிழமை, மக்கள் குறைதீர்வு நாள்முகாமில் முதியவர் தீகுளிக்க முயற்சி செய்தனர். காவல் துறையினர் மின்னல் வேகத்தில் தடுத்து வாலியில் குடிநீர் ஊற்றி கழுவி, முதலுதவி செய்தனர்.வேலூர் மாவட்டம், அனைக்கட்டு தாலுகா, புலிமேடு கிராமத் தை சேர்ந்தவர் விவசாயி காசி (வயது 73) இவருக்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் நில தகராறு இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்குவதாகவும் இதுகுறித்து மூன்று முறை புகார் அளித்துள்ளார்.
இப்படி பல முறை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் மன வேதனை அடைந்த விவசாய முதியவர் காசி 21-07-2025 திங்கட்கிழமை சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி ற்கு மண்ணெண்ணய் கேனுடன் வந்து மண்ணெண்ணய் தலை மற்றும் உடல் மீது ஊற்றிக் கொண்டு தீகுளிக்க முயற் சித்தார். உடனடியாக காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, வாலியிலிருந்த குடிநீர் அவர் மீது ஊற்றி, முதலுதவி செய்து, பின்னர் முதியவர் காசியை ஆம்புலன்சில் ஏற்றி அழைத்து சென்ற துடன் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விவசாயிகள் அவர்களுக்கிடையே நிலத்தகராறு காரணமாக விவசாய முதியவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீகுளிக்க முயன்ற சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது காவல் துறையினர் மக்கள் குறை தீர்வு முகாமுக்கு வருபவர்கள் சோதனை செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிக் கின்றனர். இருப்பினும் இந்த விவசாய முதிவயர் தீகுளிக்க முயன்றது காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:- மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு உள்ளே வரும் அனைவரையும் காவல்துறையினர் கடுமையான பாதுகா ப்பும், கடுமையான சோதனையும் மேற் கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கி ன்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக