இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டம் சார்பில் 26வது மாநாடு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டம் சார்பில் 26வது மாநாடு

 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டம் சார்பில் 26வது மாநாடு 


தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  தெற்கு மாவட்ட 26வது மாவட்ட மாநாடு செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்றது.


 மாநாட்டிற்கு  மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சி பக்கிரிசாமி, டி.கண்ணகி, பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஆர் முகில் ஆகியோர் தலைமை வகித்தனர் .முதல் நிகழ்வாக 26 ஆவது மாநாட்டு கொடியினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட மூத்த தலைவர் காசிநாதன் ஏற்றி வைத்து சிறப்பித்தார். தியாகிகளின் அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வீரமோகன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட மூத்த தலைவர்கள் இரா.திருஞானம், எஸ் ஏ முருகையன், ஜி.கிருஷ்ணன் ஆகியோர் திருவுருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செங்கிப்பட்டி காவல் நிலையம் அருகில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக உறுப்பினர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் 26 வது மாவட்ட மாநாட்டின் வரவேற்பு குழு செயலாளருமான ஆர். இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் செம்படை பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோரிக்கை முழக்கமிட்டு மாநாடு நடைபெறும் திடலுக்கு வந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டில் கல்லணை கால்வாயில் இருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடன் பணிகளை துவக்கிட வேண்டும், கிராமப்புற தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை இன்றி கடன் வழங்க வேண்டும், டி பி சானிடோரியம் காசநோய் மருத்துவமனையை முன்பிருந்தவாறு தரம் உயர்த்தி உயர் சிகிச்சை அளித்திடும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad